Latest Videos

சட்டை கிழிந்து... ரத்த காயங்களுடன் விஷால்..வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..

By Kanmani PFirst Published Mar 8, 2022, 10:16 PM IST
Highlights

விஷாலுக்கு காயம் ஏற்பட்ட காட்சிகள் இடம்பெற்று ரசிகர்ளை பதைபதைக்க வைத்தது. இதை தொடர்ந்து தற்போது லத்தி படத்தின் இறுதி சண்டை காட்சியின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் விஷால்.  
 

பிரபல நடிகரான விஷால் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாத கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது ஹைட்டும் வெயிட்டும் ஆக்சன் ஹீரோவுக்கான அம்சங்களை கொண்டுள்ளன. முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் பிரவேசித்த விஷால் ரொமாண்டிக் த்ரில்லரான செல்லமே -ல்  ஹீரோவாக நடித்திருந்தார். 

இதையடுத்து  சண்டக்கோழி  நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதே பாணியை தொடர் எண்ணிய விஷால் திமிரு , தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை  என  ஆக்சன் படங்களிலேயே நடித்தார். இந்த படங்கள் போதிய வசூலை பெற்று தரவில்லை.

இவற்றை தொடர்ந்து  தனது சொந்த தயாரிப்பில் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை  போன்ற லாபகரமான படங்களை தயாரித்தார். கடைசியாக இவர் நடித்த எனிமி..அண்ணாத்தே படத்திற்கு போட்டியாக களமிறங்கியது. இந்த படமும் போதிய வரவேற்பை பெற்று தரவில்லை..

இதையடுத்து வீரமே வகை சூடவா, துப்பறிவாளன் 2, லத்தி உள்ளிட்ட புதிய தயாரிப்புகளில் விஷால் நடித்து வருகிறார்.  இதில் வீரமே வாகை சூடவா  படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ளர்.  இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள  இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த பட்டியலில் லத்தி படம் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியாகி வைரலானது. அதில் சண்டை பயிற்சியின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்ட காட்சிகள் இடம்பெற்று ரசிகர்ளை பதைபதைக்க வைத்தது. இதை தொடர்ந்து தற்போது லத்தி படத்தின் இறுதி சண்டை காட்சியின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் விஷால்.   இந்த வீடியோவில் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உடன் விஷால் கிழிந்த காக்கி சட்டையும், உடம்பில் டீ=ரத்த காயங்களுடனும் காட்சியளிக்கிறார்.

Elated to be back on the sets for the final schedule of as we are canning the high octane climax sequence with master in https://t.co/Z5JdI216x6. pic.twitter.com/Q5UvwyUexi

— Vishal (@VishalKOfficial)

 

click me!