காதல் முத்திப்போச்சி... ஒரிஜினல் திருமணத்திற்கு தேதி குறிக்கும் கவின், லாஸ்லியா...டென்சனில் சேரப்பா...

By Muthurama LingamFirst Published Aug 22, 2019, 11:48 AM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் முதல் வேலையாக கவினும் லாஸ்லியாவும் ஏதாவது ஒரு கோவிலுக்குப்போய் தாலிகட்டிக்கொண்டு தம்பதியர்களாகிவிடுவார்களோ என்று சொல்லுமளவுக்கு அவர்களுக்குள் காதல் முற்றியிருப்பதாகத் தெரிகிறது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் முதல் வேலையாக கவினும் லாஸ்லியாவும் ஏதாவது ஒரு கோவிலுக்குப்போய் தாலிகட்டிக்கொண்டு தம்பதியர்களாகிவிடுவார்களோ என்று சொல்லுமளவுக்கு அவர்களுக்குள் காதல் முற்றியிருப்பதாகத் தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை . அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த டெஸ்டில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா. 

இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லை ’வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ என்று பாடாத குறையாக விடிய விடிய  ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

 தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று டாஸ்கை எல்லாம் முடித்துவிட்டு லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கவின், இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்று கேட்டார் லாஸ்லியா. அதற்கு பொடி வைத்து பேசிய கவின், நெனச்சத பண்ணவும் முடியல செய்யவும் முடியல, ஒரு வேலை அப்படி ஆகிடுச்சு என்றால் எல்லாம் சரியாகிவிடும். அது இல்லாம ஒரு மாதிரி போய்ட்டு இருக்கு. அதற்கு ஏற்றார் போல நீயும் ஒரு மாதரி பண்ற என்று என்னென்னவோ உளறிக்கொட்டினார்.

 ஆனால், இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் லாஸ்லியா ,மற்றும் கவின் பேசும் போது வேறு எத்தனையோ பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால், அதனை இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை. இவர்கள் இருவரும் பேசியதை வைத்து பார்க்கும் போது லாஸ்லியா கவின் மீது விரைவில் முழுமையாக காதலில் விழுந்துவிடுவார் என்று தான் தோன்றுகிறது. ஆனால், மற்றொரு புறம் இதுவும் லாஸ்லியாவின் திருவிளையாடல்களில் ஒன்றோ என்ற  ஒரு சந்தேகமும் எழுகிறது. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும்போது கவினும் லாஸ்லியாவும் தம்பதியராய் மாறி சேரப்பாவின் வயிற்றெரிச்சலுக்கு ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

click me!