நடிகர் விஜய் தான் எனக்கு போட்டி... சவால் விடும் இமான் அண்ணாச்சி..!

 
Published : Jan 26, 2018, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
நடிகர் விஜய் தான் எனக்கு போட்டி... சவால் விடும் இமான் அண்ணாச்சி..!

சுருக்கம்

iman annachi challange for actor vijay

நடிகர் விஜயின் ரசிகர்கள் பலத்தை சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவருடைய படம் பற்றிய எந்த தகவல் வெளிவந்தாலும் அதனை எந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் வைரலாக்க முடியுமோ அந்த அளவிற்கு பிரபலப்படுத்தி விடுவார்கள்.

இவருக்கு கோலிவுட் திரையுலகில் மட்டும் இன்றி, மலையாளத்திலும் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பை தாண்டி விஜயிடம் அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அவருடைய நடனம். எந்த ஒரு ரிகர்சலும் இல்லாமல் ஒரு முறை நடன இயக்குனர் ஆடுவதை பார்த்து விட்டு படப்பிடிப்பில் அதே போல் ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விடுவார் என பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிவரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றின் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் பற்றி பேட்டியளித்த அவர், எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என விஜய்க்கே சவால் விடுத்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!
'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!