அதையடுத்து வழக்கம்போல் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து, நடு நடுவே பாடல்களைப் பாடியபடி ராஜா பகிர்ந்துகொண்டார். இறுதியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவி ஒருவர், நீங்கள் முதன்முதலாக சென்ற வெளிநாடு எது..? உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்ன..? என்றார்.
தனது முதல் வெளிநாட்டுக் கச்சேரியில் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் தன்னை மட்டம் தட்டிப்பேசியதை கல்லூரி மாணவிகள் முன்னிலையில் நினைவு கூர்ந்தார் இளையராஜா.
இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகள் விழா நடத்தி அவரை சிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் சென்னை ராணிமேரி கல்லூரியின் கலை விழா நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது பிறந்தநாளை ராணிமேரி கல்லூரி நிர்வாகத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அதையடுத்து வழக்கம்போல் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து, நடு நடுவே பாடல்களைப் பாடியபடி ராஜா பகிர்ந்துகொண்டார். இறுதியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவி ஒருவர், நீங்கள் முதன்முதலாக சென்ற வெளிநாடு எது..? உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்ன..? என்றார்.
அதற்கு பதிலளித்த ராஜா,’’இசையமைப்பாளரான பிறகு நான் சென்ற நாடு மலேசியா; கச்சேரி ஒன்றிற்காக சென்றிருந்தேன். அப்போது ’அன்னக்கிளி’, ’பத்ரகாளி’, ’தீபம்’ ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தேன். டி.எம்.சௌந்தரராஜன் என்னோடு வந்திருந்தார். மேடையில் நான் இசையமைக்கிற பாடல்களை பாடிக்கொண்டிருந்த நேரத்தில் டி.எம்.சௌந்தரராஜன், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களைச் சொல்லி என்னையும் அவரையும் ஒப்பிட்டார். 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அவையில் என்னை மட்டம் தட்டிப் பேசினார் என்பது மறக்கமுடியாத சம்பவம்” என்றார்.