’பேட்ட’,‘விஸ்வாசம்’ கட்டப்பஞ்சாயத்துல இதை விட ஹாட்டான ஒரு நியூஸ் இருக்கவே வாய்ப்பில்லைங்க...கதறியழும் கார்த்திக் சுப்பாராஜ்...

Published : Jan 06, 2019, 01:00 PM IST
’பேட்ட’,‘விஸ்வாசம்’ கட்டப்பஞ்சாயத்துல இதை விட ஹாட்டான ஒரு நியூஸ் இருக்கவே வாய்ப்பில்லைங்க...கதறியழும் கார்த்திக் சுப்பாராஜ்...

சுருக்கம்

நமது ட்ரெயிலர் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே யாரோ ஒரு கருப்பு ஆட்டின் மூலம் நமது வசனங்கள் ‘விஸ்வாசம்’ டீமுக்கு தெரிந்திருக்கிறது என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

’பேட்ட’ பட ட்ரெயிலரில் வரும் ரஜினியின் அத்தனை பஞ்ச் டயலாக்குகளுக்கும் ஒரே நாளில் பதில் டயலாக்குகள் ‘விஸ்வாசம்’ ட்ரெயிலர் தயாரானது எப்படி? உன் டீமில் யாரோ கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள் கண்டுபுடி’ என்று ரஜினி கார்த்திக் சுப்பாராஜிடம் சொன்னதாகவும் அதைக்கேட்டு கார்த்திக் சுப்பாராஜ் கதறி அழுததாகவும் அவருக்கு விஸ்வாசமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேட்ட ட்ரெயிலரில் ரஜினி, ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’ என்று பேசியிருப்பார்.

அடுத்து வந்த விஸ்வாசம் பட முன்னோட்டத்தில், ’பேரு தூக்குதுரை ஊரு தேனி பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அஜீத் பேசியிருந்தார்.

அதேபோல், விஸ்வாசம் முன்னோட்டத்தில் வில்லன் ‘என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன்’ எனக்கூற, அஜித் ‘ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ எனப் பேசுவதும் ரஜினியைக் குறிக்கிறது என்றனர்.

இவை மட்டுமின்றி, கொல காண்டுல இருக்கேன் என ரஜினி பேசும் வசனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், ‘உங்கள பாத்தா கொல வெறி வரனும், ஆனா எனக்கு உங்கள பிடிச்சிருக்கே என்று அஜீத் பேசியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கேலிப்படங்கள் நிறைய உருவாக்கப்பட்டன.அவற்றில் ரஜினிக்கு அஜீத் நேரடியாக  பதிலடி கொடுப்பது போல இருப்பதால் ரஜினி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், அது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை. நமது ட்ரெயிலர் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே யாரோ ஒரு கருப்பு ஆட்டின் மூலம் நமது வசனங்கள் ‘விஸ்வாசம்’ டீமுக்கு தெரிந்திருக்கிறது என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு பதறிய கார்த்திக் சுப்பாராஜ், இரு தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் கலந்துகொண்ட பார்ட்டியில் மேற்படி தகவலைப் பகிர்ந்து ‘நான் வெறுமனே டைரக்டர் மட்டுமில்ல. ரஜினி சாரோட தீவிர ரசிகன். என் படத்துல போயா இப்பிடியெல்லாம் நடக்கணும்?’ என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாராம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?