
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தார்.
இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் அவர் வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது , , இளையராஜா எனக்கு தலைமை ஆசிரியர் மாதிரி. அவரிடம் நான் ஒழுக்கம் கற்றுக்கொண்டேன். தனது வாழ்க்கையை தவம் மாதிரி அமைத்துக்கொண்டார். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன்.
மேதைகள் மற்றவர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இளையராஜாவிடம் நான் பாராட்டையும், ஆசிர்வாதத்தையும் வாங்கி இருக்கிறேன். எனது இசைக்கு அடித்தளம் இளையராஜாதான் என்றார்.
இதைத் தொடர்ந்து இளையராஜா, தென்றல் வந்து தீண்டும் போது எனற பாடலை பாடினார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கீ போர்டு வாசித்து அசத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த ரசிகர்களை உறசாகப்படுத்தியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.