
தலைவரை... முதல்வர் சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்க ரசிகர்கள் ஆசை பட்டாலும், ரஜினி தனக்கு முதலமைச்சராகும் ஆசை அறவே இல்லை என அதிரடியாக இன்று, லீலா பேலஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஏற்கனவே அசுர பலம் கொண்ட அதிமுக - திமுக என இரண்டு கட்சிகளை தோற்கடிக்க வேண்டுமென்றால், மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும். அப்போது தான் அரசியலுக்கு வருவேன் என தெளிவாக குழப்பி விட்டு போய்விட்டார். தலைவர் சொல்லறது புரியுற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கும் என அவரது ரசிகர்கள் பட்டாளம் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கிவிட்டது.
ரஜினி முதல்வர் பதவி, வேண்டாம்... வேண்டாம்... என்பதால் கட்சி ஆரம்பித்தாலும், ரஜினி ரசிகர்களின் வாக்கு அந்த கட்சிக்கு விழுவதே சந்தேகமாகிவிடும். மேலும் இன்று ரஜினிகாந்த் பேசியது ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல்... கட்சி என்னுடையது தான்... ஆனால் முதலமைச்சர் வேற என ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு. தமிழகத்திற்கு மிகவும் புதிது தான் என்றாலும், அவரை ஆதரிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி கட்சியை மட்டும் ஆரம்பித்து விட்டு, முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்காவிட்டால் ரஜினியின் அரசியல் பிரவேசம், இலவு காத்த கிளி போல் ஆகிவிடும் என்பதஒ நெட்டிசன்கள் சூசமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். அதை உறுதி செய்யும் விதமாக "இலவு காத்த கிளி ரஜினி" என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
மக்களிடம் ஏற்படும் மாற்றத்திற்காக ரஜினி காத்திருந்தாள்... எப்போது இந்த காய் கனியும், அதனை சாப்பிடலாம் என கிளி குத்த வைத்து காத்திருக்க, கடைசியில் அது வெடித்து பஞ்சு பஞ்சாய் போகும் போது தான் கிளிக்கு தெரிந்ததாம் இது பஞ்சு காய்... எப்போதுமே பழுக்காது என்பது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.