
2015 ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாரி. இதில் பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக மிரட்டியிருப்பார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் இப்படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆனது.
இந்நிலையில் மாரியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'மாரி2' உருவாகிறது. இதில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். இவரை தவிர வரலட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டேவினோ தாமஸ் நடிக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் 'மாரி2' வில் இணைகிறார் யுவன் . இதில் கூடுதல் சிறப்பாக மகனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாட உள்ளார்.
இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு தெய்வீக மகிழ்ச்சி அனுபவம். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.