கூடலூரில் இளையராஜா தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்த மின்விளக்கு குறித்த செய்தி வைரலாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா தேனீயில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இளையராஜா பெயருடன் இருக்கும் மின்விளக்கு கோபுர கல்வெட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையிலகில் அறிமுகமான இசை மேதை இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.
undefined
தற்போது பல படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா அரசியலிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். தனது சொந்த மாவட்டமான தேனீயில் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார் இளையராஜா. நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், மின்விளக்கு வைக்கப்பட்டது குறித்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. எம்.பி. பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதனையடுத்து இளையராஜாவை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது. எம்.பி. ஆனதும் இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. மத்திய அரசு அவருக்கு கௌரவம் செய்துவரும் நிலையில் அவரும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்