
இசைஞானி இளையராஜாவின் மகள், பவதாரிணி இசையமைத்த படங்கள் தொடந்து தோல்வியை சந்தித்ததால், தற்போது அதிரடியாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார்.
இளையராஜாவின் இசைக்கு மயங்காத மனிதர்களே இல்லை, அவரை தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் யுவன் ஷங்கர்ராஜா, கார்த்திக் ராஜா, மகள் பவதாரிணி, என அனைவரும் இசையையே தேர்வு செய்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள்.
இந்த மூவரில் இசையில் நிலையான இடத்தை பிடித்தவர் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா தான். கார்த்தி ராஜா தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து வருகிறார். மகள் பவதாரிணி, மை டியர் குட்டிச்சாத்தான் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, தேசிய விருது உற்பட பாடல்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
ஆனால், இவர் இசையமைத்த படங்களோ தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தது. இதற்கு காரணம் தன்னுடைய பெயர் தான் என்று எண்ணிய பவதாரிணி தற்போது, ராஜா பவதாரிணி என்று பெயரை அதிரடியாக மாற்றி கொண்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது பவதாரிணி இசையமைத்து வரும், 'மாயநதி' படத்திலும் ராஜா பவதாரிணி என்றே இவருடைய பெயர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.