
இசைஞானி இளையராஜாவின் இசையை கேட்டு மயங்காத ரசிகர்கள் இருந்திருக்க முடியாது. மனதில் வேதனைகளை சுமக்கும் பலருக்கு இன்று வரை இளையராஜாவின் இசை தான் உணர்வு பூர்வமான மருந்தாக இருந்து வருகிறது. சின்ன சின்ன இசை கச்சேரி முதல் மிக பெரிய பிரமாண்ட இசை அரங்கம் வரை ஒலித்துக்கொண்டிருகிறது இளையராஜாவின் இசை என்றால் அது மறுக்க முடியாத உண்மை.
முடிவுக்கு வாராத சர்ச்சை:
இந்நிலையில் கடந்த வருடம் திடீர் என இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை இனி 'எஸ்.பி.பி பாடக்கூடாது என கூறினார். இளையராஜா இப்படி கூறியதற்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இது குறித்து இளையராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கூறப்படவில்லை. மேலும் எஸ்.பி.பி இந்த பிரச்னையை பற்றி யாரும் இனி பேசவேண்டாம் என கூறி இந்த பிரச்சனையில் இருந்து விலகினார்.
பிரச்சனைக்கான காரணம்:
இளையராஜா எதையும் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து செயல் படக் கூடிவர் என்பது இவரை பற்றி தெரிந்த அனைத்து சினிமா பிரபலங்களுக்கு தெரியும். அதனால் இவரை பற்றி தெரிந்த பலர் இது குறித்து அவரிடம் கேள்விகள் கூட எழுப்பவில்லை.
மேலும் இந்த பிரச்சனைக்கு காரணம் இளையராஜா வின் மகன் மற்றும் எஸ்.பி.பி யின் மகன் தான் என்றும், எஸ்.பி.பி வளர்ச்சி பிடிக்காமல் இளையராஜா இப்படி செய்துவிட்டார் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
வெளிவந்த அதிர்ச்சி தகவல்:
தற்போது இளையராஜா இப்படி கூறக்காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாடகர் எஸ்.பி.பி மற்றும் அவருடைய மகன் சரண் ஆகியோர் இணைந்து (SPB FANS CHARITABLE FOUNDATION) என்கிற அமைப்பை தொடங்கி ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று வசதி மிக்க ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
அப்படி இவர் சந்துக்கும் நபர் ஒருவருக்கு அதிகமான தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் SPB. ரசிகர்களை குடும்பத்துடன் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுதுக்கொள்கிறாராம். மேலும் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடி விட்டு அவர்களுடன் உணவு அருந்திவிட்டு செல்வாராம் மற்ற பாடல்களை குழுவினரும் SPB சரணும் பாடுவார்களாம்.
இந்த தகவலை அறிந்த இளையராஜா, உடனடியாக தன்னுடைய பாடலை இனி எஸ்.பி.பி பாடக்கூடாது என முடிவு செய்து இப்படி ஒரு முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆதாரம்:
இதற்கு ஆதாரமாக, நேற்றைய தினம் திருச்சியில் கெட்டு கெதர் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது அதில் எஸ்.பி.பி கலைத்துக்கொண்டு பாடியுள்ளார். அதற்க்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.