
சினிமா தயாரிப்பாளா் தாணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிகா் அமீா், "வேண்டுமென்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள். அவரது குடும்பத்திற்கு நான் நிதியுதவி செய்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் அசோக் குமார். நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் உறவினா். சசிகுமாரின் புரொடக்ஷன் நிறுவனத்தைக் கவனித்துவந்தார், இவர், கடந்த நவம்பர் 21-ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
"அன்புச்செழியன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதால் வேறுவழியின்றி தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டேன்" என்று கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக் குமார்.
இதனையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது புகார் அளித்தனர்.
இதனால் அன்புச் செழியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதும், அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தாணு, "அசோக் குமாரின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், அனைவரும் கூறுவது போல் அன்புச்செழியன் கெட்டவர் இல்லை என்றும் அவரைப் போன்றவர்களை நம்பித் தான் சினிமா துறை இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றும் கூறினார். மேலும், "சசிகுமாரை வைத்து படம் எடுத்து அதில் வரும் பணத்தை அசோக் குமாரின் குடும்பத்திற்கு கொடுக்கிறேன்" என்றும் தாணு கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமீர், "வேண்டுமென்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள், நான் படம் எடுத்து அதில் வரும் பணத்தை அவர் குடும்பத்திற்கு தருகிறேன்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.