மா துஜே சலாம்! பாரத தாய்க்கு தலை வணங்குகிறாராம் கமல்; விஸ்வரூபம் -2 போட்டோ உள்ளே...

 
Published : Dec 01, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
மா துஜே சலாம்!  பாரத தாய்க்கு தலை வணங்குகிறாராம் கமல்; விஸ்வரூபம் -2 போட்டோ உள்ளே...

சுருக்கம்

Maa Tujee Salam! Kamal is the head of Bharata mother Vishwaroopam 2 Photo inside

விஸ்வரூபம் - 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் படத்தின் புகைப்படம் ஒன்றையும் மா துஜே சலாம்! என்ற பதிவையும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்.

கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் பல தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, விஸ்வரூபம்-2-ஆம் பாகத்திற்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.

இதனையடுத்து இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பாதியில் நின்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் கமல் தொடங்கினார்.

தற்போது இப்படம் குறித்த புதிய தகவலை கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் புகைப்படத்துடன். அந்தப் புகைப்படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா உள்பட பலர் இராணுவ சீருடையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து கமல் தெரிவித்து இருப்பது:

"தமிழில் விஸ்வரூபம்-2 என்றும் இந்தியில் விஸ்வரூப்-2 என்றும் வெளியாகவுள்ளது. பெண் இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையம் சென்னை தான். இந்த சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும், இந்த நாடும் பெருமை அடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரத தாய்க்கு. மா துஜே சலாம்" என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?