
சர்ச்சைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திரையில் நடிப்பவர்கள், உண்மை முகங்கள் மெதுவாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் தனியார் தொலைக்காட்சி ஒரு பிரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் எடுத்ததும் நடிகர் சக்தி கண்கலங்கியவாறு, கேமராவை பார்த்து ரொம்ப பீலிங்காக இருக்கிறது, இரிடேடிங் ஆகுது என கூறுகிறார்.
அங்கு திடீர் என வரும் காயத்திரி என்ன நடந்தது என கேட்க, அதற்கு கஞ்சா கருப்பு உன்னை செருப்பால் அடித்து, என் செருப்பை வேஸ்ட் பண்ண நினைக்க வில்லை என்று அவள் கூறுகிறாள் என கஞ்சா கருப்பு காயத்திரியிடம் படுத்துக்கொண்டே கூறுகிறார். பின் காயத்திரி சக்தியை கட்டி அனைத்து ஆறுதல் கூறுகிறர். இதனை தொடர்ந்து அனைவரும் ஓவியாவாக முடியாது என மிகவும் கோபமாக காயத்திரி பேசுவது போல் வெளியாகியுள்ளது.
இதில் இருந்து இத்தனை நாள், ஜூலியையும் பரணியை மட்டும் வைத்து வாட்டி வதக்கிய பிக் பாஸ் குடும்பத்தில் அடுத்ததாக சக்தி மற்றும் ஓவியா சிக்கியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.