விஜய் நடிப்பில் இந்த படத்தை 20 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன்; இயக்குனர் ரஞ்சித்;

 
Published : Jun 20, 2018, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
விஜய் நடிப்பில் இந்த படத்தை 20 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன்; இயக்குனர் ரஞ்சித்;

சுருக்கம்

i saw this movie of actor vijay more than 20 times

மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம், தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இயக்குனராக பெயரெடுத்தவர் ரஞ்சித். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு முன்னேறிய இவர், கபாலி, காலா என இரண்டு திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்கினார்.

புரட்சிகரமாகவும், அடித்தட்டு மக்களின் வலியையும் வேதனையையும் உரக்க சொல்வதும், இவரது திரைப்படங்களின் தனி பாணி. இவரின் அடுத்த படம் யாருடன்? என்பது தான் இப்போது இவரது ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வியும் எதிர்பார்ப்பும்.

சிலர் இவர் அஜீத்தின் படத்தை இயக்கப்போகிறார் என்றும், சிலர் விஜய் படத்தை இயக்க போகிறார் என்றும், கூறி வருகின்றனர். ஆனால் அது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில் காலா திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் தான் விஜயின் படங்களை தான் அதிகம் பார்த்ததாக கூறி இருக்கிறார். அதிலும் விஜய் மற்றும் ஷாலினி நடித்து சூப்பர் ஹிட் ஆன ”காதலுக்கு மரியாதை” திரைப்படத்தை ரஞ்சித் 20 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்