
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்கள் பலர். அதே நேரம் தனக்கு இருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர்களும் உண்டு. அந்த வகையில் பிக் பாஸ் மூலம் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் காயத்திரி ரகுராம். இவரின் நடவடிக்கைகளுக்காக சமூக வலைதளங்களில் இவரை திட்டி தீர்த்தனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற முறை ”ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என ஸ்லோகன் வைத்திருந்தனர். இம்முறை ”நல்லவர் யார்? கெட்டவர் யார்?” என ஸ்லோகன் வைத்திருக்கின்றனர்.
இந்த ஸ்லோகனை பார்த்து கடுப்பான காயத்திரி தனது டிவிட்டரில் பிக்பாஸ் குழுவை திட்டி தீர்த்திருக்கிறார். ஆனால் அவர் மறைமுகமாக கமலஹாசனை திட்டி இருப்பது போல இருக்கிறது அவரின் அந்த பதிவு.
”சிலர் தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக திரையுலகை சேர்ந்த தங்களது நண்பர்களை(சொந்தங்களை) ” நல்லவர் யார் கெட்டவர் யார்” என கூறி தாழ்த்துகிறார்கள். பிறரை விமர்சித்து புகழ் தேடுகின்ற இந்த பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டினுள் சென்று பார்க்க வேண்டும். அப்போது தான் தெரியும்” எனவும் கூறி இருக்கிறார். இவர் இவ்வாறு விமர்சித்திருப்பது கமலுக்கும் பொருந்தும். சமீபத்தில் கூட கமல் ஒரு அரசியல்வாதி என காயத்திரி விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.