
என்னுடைய 25 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் ஒரு நடிகையாக நான் நேர்மையாகத்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளேன் என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள கஜோல் தமிழில் மின்சார கனவு மற்றும் விஐபி-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தன்னுடை 25 வருட சினிமா அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், "இதுவரை நாள் ஒருநாள் கூட படப்பிடிப்பை நிறுத்தியதும் இல்லை. விமானத்தை தவறவிட்டதோ, ரத்து செய்ததோ இல்லை.
என்னுடைய 25 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் ஒரு நடிகையாக நான் நேர்மையாகத்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளேன்.
சினிமா துறையில் உள்ள அனைவரும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது இல்லை. தூங்குவது இல்லை. இதனால், அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அப்படியிருந்தால் படப்பிடிப்பும் பாதிக்கப்படும். யாரோ ஒருவர் பையிலிருந்துதான் லட்சக்கணக்கில் பணம் வெளியேறுகிறது. அவர்களுக்காக நாம் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா.
ஒரு நாள் என்னுடைய மகள் நைசாவுக்கு 104 டிகிரி காய்ச்சல் இருந்தது. அன்று மட்டும்தான் என்னுடைய படப்பிடிப்பை நான் ரத்து செய்தேன்" என்று கஜோல் தெரிவித்துள்ளார்.
கஜோல் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் இந்துஸ்தான் யுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.