
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா, சீனா மற்றும் ஐ.நா. வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு தனது ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா எக்ஸ் பக்கத்தில்: இப்போது நிஜத்தில் வீரம் கொண்ட ஹீரோக்கள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக எல்லைகளில் துணிச்சலுடன், பயத்தைக் கடந்து, துல்லியம் உறுதியுடன் செயல்படுகின்றனர். இதை அறியாமலே இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் என் முதல் சிம்பொனியை இசையமைத்து அதற்கு வேலியண்ட் Valiant (மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டேன்
நமது தன்னலமற்ற துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என நம்புகிறேன். ஜெய பேரிகை கொட்டடா! கொட்டடா! ஜெய பேரிகை கொட்டடா! - பாரதியார். இத்தருணத்தில் பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் நான் எனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையையும், ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நம் வீரம் மிக்க ராணுவ வீரர்களின் மாபெரும் முயற்சிக்காக ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்" என குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.