
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. அதற்கு காரணம் பாலாஜியின் மனைவி நித்யா ஆரம்பித்திருக்கும் புதிய பிரச்சனை தான். நேற்றே காரட் பொரியலில் வெங்காயம் போட மாட்டேன். எனக்கு பிடிக்காது என பிரச்சனையை துவக்கியவர், இன்றும் அதே போல வேறு ஒரு பிரச்சனையை துவக்கி இருக்கிறார்.
நித்யா தன் விருப்பத்தை பற்றி மட்டுமே யோசிப்பவராக இருப்பது, அங்கு இருக்கும் பிற போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் பிரமோவில் நித்யா மறுபடியும் டிஸ்கஷன் பிரச்சனை பற்றி பேசுகிறார். அதற்கு மும்தாஜ் யம்மா ப்ளீஸ் என்ன விட்டுடு. மறுபடியும் இந்த பிரச்சனைய ஆரம்பிக்காதீங்க என்பது போல கெஞ்சுகிறார்.
தொடர்ந்து நித்யா பேச எரிச்சலான மும்தாஜ், அவரை கேலி செய்கிறார் நித்யாவிடம் பேசி பார்த்த பாலாஜியும், கடைசியில் கடுப்பாகி என்னால பேச முடியல சாரி…! என ஒதுங்கி கொள்கிறார்.
நித்யாவின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்வது பிக் பாஸ் வீட்டின் சூழலை இறுக்கமாக மாற்றி இருக்கிறது. இதனால் இன்று ஏதேனும் சண்டை வருமா என நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.