மூன்று தோல்விப்படங்கள்... ஆனாலும் நான்காவது படத்தை இயக்கிமுடித்தார் ‘மீடூ’ லட்சுமி ராமகிருஷ்ணன்

By sathish kFirst Published Oct 29, 2018, 11:07 AM IST
Highlights

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என்ற பரவாயில்லை, சுமார், சுமாருக்கும் கீழே படங்களை இயக்கிய ’என்னம்மா’ லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து தோல்விப்படங்கள் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெறும் இயக்குநர்கள் பட்டியலில் லட்சுமிம்மா இடம் பிடிக்கிறார்.


‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என்ற பரவாயில்லை, சுமார், சுமாருக்கும் கீழே படங்களை இயக்கிய ’என்னம்மா’ லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து தோல்விப்படங்கள் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெறும் இயக்குநர்கள் பட்டியலில் லட்சுமிம்மா இடம் பிடிக்கிறார்.

’மி டு’ பஞ்சாயத்துகளில் படுபிஸியாக இருந்த நிலையிலும், தனது அடுத்த படமான  ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ‘பசங்க’ படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற, ‘கோலிசோடா’வில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இத்திரைப்படம் பற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு இயக்குநர் ல‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும்போது, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச் சிறந்த வருடம். ‘96’, ‘ராட்சசன்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘வட சென்னை’ என்று வரிசையாக நல்ல படங்கள் வெளிவந்து இந்த 2018-ம் ஆண்டை அலங்கரித்திருக்கின்றன.

இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவைதான். இந்த ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களான சமுத்திரக்கனி மற்றும் பாண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி.

இந்த அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது.  இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார்.

click me!