அத்தனை கோடி சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு எழுதிவைக்கும் சூப்பர் ஸ்டார்...

Published : Dec 25, 2018, 11:29 AM ISTUpdated : Dec 25, 2018, 11:48 AM IST
அத்தனை கோடி சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு எழுதிவைக்கும் சூப்பர் ஸ்டார்...

சுருக்கம்

அரதப் பழசான செல்போன்களைப் பயன்படுத்துவது, அரசு பஸ்களில் பயணம் செய்வது, தியேட்டர்களில் கியூவில் நின்று படம் பார்ப்பது, ரோட்டுக் கடைகளில் சாப்பிடுவது என்று மிக ஆச்சர்யமான பழக்கவழக்கங்கள் கொண்டவர் சொன் யுன்.  

’கண்ணா, செத்ததுக்கு அப்புறம் பணத்தை சுடுகாட்டுக்கூட எடுத்துட்டுப் போகமுடியாது இல்லையா. அதனால என் சொத்து முழுவதையும் ஏழை ஜனங்களுக்கு உதவும் அறக்கட்டளைகளுக்கு எழுதிவைக்கப்போகிறேன்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஒரு சூப்பர் ஸ்டார்.

தலைப்பைப் படித்துவிட்டு தேவையில்லாத மனக்கிலேசங்களுக்கு ஆளாகவேண்டாம். இவர்  ஹாங்காங்கின் சூப்பர் ஸ்டார் நடிகர் சொவ் யுன் ஃபேட்.

பல ஆஸ்கார் விருதுகளை வென்ற ’க்ரவுசிங் டைகர் ஹிட்டன் டிராகன்’படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் சொன் யுன் ஃபேட். ஹாங்காங் நடிகரான இவர்  எ பெட்டர் டுமாரோ, தி கில்லர், ஹார்ட் பாயில்ட், , ஹிடன் டிராகன், பைரேட்ஸ் ஆப் கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர்,2015 ஆம் ஆண்டு, போர்ப்ஸ் வெளியிட்ட  உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 24வது இடத்தைப் பிடித்திருந்தார்.

அரதப் பழசான செல்போன்களைப் பயன்படுத்துவது, அரசு பஸ்களில் பயணம் செய்வது, தியேட்டர்களில் கியூவில் நின்று படம் பார்ப்பது, ரோட்டுக் கடைகளில் சாப்பிடுவது என்று மிக ஆச்சர்யமான பழக்கவழக்கங்கள் கொண்டவர் சொன் யுன்.

தற்போது அகில உலகமே வியக்கும் வண்ணம் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அறக்கட்டளைகளுக்கு எழுதிவைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.’இந்தப் பணத்தை எப்போதும் கூடவே வைத்திருக்க முடியாது. இறப்பிற்கு பின் அந்த சொத்துகளை கொண்டு செல்ல முடியாது. ஒரு நாள் போய் சேர்ந்துவிட்டால், அதை மற்றவர்கள் பயன்படுத்தக் கொடுக்க வேண்டும். அதைதான் செய்கிறேன்.

என் இறப்பிற்கு பின் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க இருக்கிறேன். இந்த உலகில் எதும் நிரந்தரமானதல்ல. இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று என் குரு கூறுவார் என்று குறிப்பிட்டுள்ள சோவ்,  எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்ற கணக்கு தனக்கு தெரியாது என்கிறார்.

ஆனால் இவரது சொத்து மதிப்பானது குறைந்தபட்சம் 570 மில்லியன் டாலர்களாவது இருக்கும் என்கிறாராம் இச்செயலை மனப்பூர்வமாக ஆதரிக்கும் அவரது மனைவி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!