
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என, தென்னிந்திய திரையுலகை சேர்ந்தவர்கள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஹாலிவுட் நடிகர் ஒருவர், வித்தியாசமான அணுகுமுறையால் பட வாய்ப்பு கேட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான, பில் டியூக் சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாக்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.
சென்ற வருடம், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு, பிறந்த நாள் வாழ்த்து கூறி ஷாக் கொடுத்தார். அதை தொடர்ந்து தற்போது , 'தர்பார்' படத்தில் தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருமாறு ஏ.ஆர்.முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பில் டியூக் பதிவிட்டுள்ள பதிவில், “எனக்கு தமிழ் பேச வராது.. ஆனால் என்னால் ரஜினிகாந்துக்கு தூரத்து அமெரிக்க சகோதரனாகவோ, அல்லது நயன்தாராவுக்கு மாமாவாகவோ நடிக்க முடியும்.. அவர்கள் கூட என்னால் நடிக்க முடியும் என்றே சொல்வார்கள்.. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவனாலும் எப்படியாவது என்னை சரி செய்துகொள்ள முடியும்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என முருகதாஸிடம் கேட்டுள்ளார்.
இவரது கேள்விக்கு இயக்குனர் முருகதாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து பதில் தரப்போகிறாரா அல்லது, ட்விட்டர் மூலம் பதில் கொடுப்பாரா என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.