Veeran Review: ஹிப் ஹாப் தமிழா ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள 'வீரன்' எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..

Published : Jun 02, 2023, 03:54 PM IST
Veeran Review: ஹிப் ஹாப் தமிழா ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள 'வீரன்' எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..

சுருக்கம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள வீரன் திரைப்படம் எப்படி இருக்கிறது என, ட்விட்டரில் ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்.  

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில், ஏ.ஆர்.கே.  சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'வீரன்'. குழந்தைகளை கவரும் விதத்தில், சூப்பர் ஹீரோ கான்சப்டை மையாக வைத்து ஈடுபட்டுள்ள இப்படம், எப்படி இருக்கிறது என ட்விட்டரில் வலம் வந்துகொண்டிருக்கும் விமசனங்கள் பற்றி பார்க்கலாம்.

'வீரன்' படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இப்படத்தை இயக்கிய இயக்குனர், ARK சரவண் பாராட்டிய போட்டுள்ள பதிவில், தமிழ் சினிமாவில் 2 விதமான படங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பொழுதுபோக்கு நகைச்சுவைத் திரைப்படங்களைக் கொடுப்பது கடினம், ஆனாலும் அவர் அந்த வகை படங்களை வழங்கியுள்ளார். இரண்டு படங்களும் குழந்தைகளையும், குடும்ப பார்வையாளர்களையும் திருப்திப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
 

மற்றொரு ரசிகர், வீரன் - ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்றும், சூப்பர் ஹீரோ கதை அம்சத்தை வேடிக்கையான நம்பகத்தன்மையோடு கூறியுள்ளனர். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் கண்டுகளிக்க நேர்த்தியான படம் என தெரிவித்துள்ளார். படத்தின் நேரத்தை கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம் ரொம்ப பெருசா இருந்துச்சி கிளைமேக்ஸ் என தெரிவித்துள்ளார்.

 

இவரது தொடர்ந்து வீரம் படம் குறித்து, விமர்சனம் கூறியுள்ள ரசிகர்.... "முதல் பாதி மிகவும் காமெடியாக உள்ளது. முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோரின் காம்போ வேற லெவல் என தெரிவித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி செம்ம. கான்செப்ட் பக்கமா கதை குள்ள போயிட்டா செம்ம ஜாலியான பொழுதுபோக்கு படம் என தெரிவித்துள்ளார்.
 

திரைப்பட வணிகவியல் நிபுணர் ரமேஷ் பாலா 'வீரன்' படம் குறித்து போட்டுள்ள பதிவில், வீரன் படத்தின்  முதல் பாதியில், ஒரு இளைஞன் தனது கிராமத்தை காப்பாற்ற தனது சூப்பர் பவரை பயன்படுத்துகிறான். கிராமிய வாழ்க்கையின் காவல் தெய்வத்துடன் கலந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட் படமாக உருவாகியுள்ளது வீரம். மிகவும் சுவரசயமான, காமெடி நிறைந்த திரைப்படம். ஆதி நடிப்பு அபாரம். இரண்டாவது பாகத்தில் ஆதியை சூப்பர் ஹீரோவாக பார்க்கமுடிகிறது என தெரிவித்துள்ளார்.
 

இவரது தொடர்ந்து மற்றொரு ரசிகர்கள் கூறுகையில், 'வீரன்' படத்தை பார்த்துவிட்டேன். நிறைய வேடிக்கை நிறைந்த படமாக இருந்தது. வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளை தண்டு கிராமம் சார்ந்த, கதையை சுவாரஸ்யமாக கூறியுள்ளார் இயக்குனர். நகைச்சுவை காட்சியகள் அற்புதம். ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய பலத்தை செலுத்தி நடித்துள்ளதை பார்க்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!