
பிரபல பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'டியூப் லைட்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஒருவாரமாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது 'டியூப் லைட்' திரைப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு, ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்து வைத்திருந்த படக்குழு நேற்று மாலை 'டியூப் லைட்' டீசரை வெளியிட்டது.
'டியூப் லைட்' டீஸரை போட்டதும், 'பாகுபலி 2' இருட்டுக்குள் ஓடி ஒளிந்துக் கொண்டது, ஆமாம்,. சல்மானின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியான சில நிமிடங்களில் டாப் டிரெண்டானது. இப்போ இதுதான் டாக்கும் கூட.
மூன்றாவது முறையாக கபீர் கான் - சல்மான் கான் கூட்டணியில் போர் வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் 'டியூப் லைட்' திரைப்படம் இந்தியர் ஒருவர் சீன பெண் மீது காதலில் விழுவது போன்று படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த சீனா - இந்தியா போரின்போது, எல்லையில் தோன்றிய காதலை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கபீர்கான் படமாக்கியிருக்கிறாராம்.
இப்படத்தில் உணர்ச்சி, ரொமான்ஸ், போர் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சீன நடிகை ஜூஜூ நடித்துள்ளார்.
இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.