"திரி" படம் குறித்து மனம் திறந்த நாயகன் அஸ்வின்...

 
Published : Jun 28, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"திரி" படம் குறித்து மனம் திறந்த நாயகன் அஸ்வின்...

சுருக்கம்

hero ashwin about thiri movie

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'இதற்கு தானே ஆசை பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில்  இப்படத்தை Seashore Gold Productions  என்கிற பட நிறுவனுத்துக்காக ,திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர். 

கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ''திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது. ஆக்க்ஷன்-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை  சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'திரி' சில  சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். இப்படித்தான் திரைக்கதைக்காக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். காதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் . இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோது காத்துக்கொண்டிருக்கிறோம்'' திரியின் தொழில்நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை ஆகும். 'சதுரங்க வேட்டை 'புகழ் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார் , ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். 'ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள 'திரி ' மூலம் மக்கள்  குடும்ப குடும்பமாக  திரையரங்களிற்கு வந்து ஆதரவளிப்பார்கள்' என நம்பிக்கையோடு கூறி விடை  பெற்றார் நாயகன் அஸ்வின்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!