பேரு தூக்குதுரை... ஒத்தைக்கு ஒத்த வாடா... கொல மாஸ் விஸ்வாசம் டிரெய்லர் இதோ

Published : Dec 30, 2018, 01:41 PM ISTUpdated : Dec 30, 2018, 01:46 PM IST
பேரு தூக்குதுரை... ஒத்தைக்கு ஒத்த வாடா... கொல மாஸ் விஸ்வாசம் டிரெய்லர் இதோ

சுருக்கம்

தல ரசிகர்கள் விஸ்வாசம் டீஸர் அப்டேட் கேட்டு இப்படித் தான் நொந்து வெந்துபோன ரசிகர்களுக்கு மரண மாஸா ஒரு ட்ரைலரை வெளியிட்டு துள்ளிக்குதிக்க வைத்துள்ளது விஸ்வாசம் டீம்!

ரஜினியின் பேட்ட படத்தை போன்றே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேட்ட படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸோ மணிக்கு ஒருமுறை அப்டேட் கொடுக்கிறது. ஆனால், விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸிடம் அஜித் ரசிகர்கள் கெஞ்சினாலும் கண்டுகொள்வதே இல்லை.

பேட்ட ட்ரெய்லர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ட்விட்டர் முழுவதும் இருந்தது. விஸ்வாசம் படத்தின் டீஸர் எப்பொழுது வரும் என்று தெரியாமல் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருந்த ரசிகர்கள் பேட்ட ட்ரெய்லரை பார்த்ததும் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் மீது கோல காண்டில் இருந்தனர்.

ரசிகர்களின் வெறித்தனத்தை சாந்தப்ப படுத்தும் முயற்சியாக படத்தின் எடிட்டர் ரூபன் மூலம் கொல மாஸா ஒரு டிரெய்லர் வந்துகொண்டே இருக்கிறது என டிவீட் போடவைத்தனர். ரூபனின் ட்விட்டைப் பார்த்த ரசிகர்கள் குழியில் கொண்டாடி மகிந்த கொண்டிருக்கும் நேரத்தில் கோல மாஸா ஒரு போஸ்டர் போட்டு இன்று வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டனர் தயாரிப்பு நிறுவனம். சொன்னதைப்போலவே கொல மாசா ஒரு டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி