பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன பிளேபாய் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் !! ருசிகர தகவல்கள் !!

Published : Dec 07, 2018, 11:24 AM IST
பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன  பிளேபாய் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் !! ருசிகர தகவல்கள் !!

சுருக்கம்

பிளேபாய் கவர்ச்சி பத்திரிக்கை நிறுவனர் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிளேபாய்  என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஹியூ ஹெஃப்னர்தான்.

ஹியூ ஹெஃப்னர் சிகாகோவில் கிரேஸ் கரோலின் ஸ்வன்சென் மற்றும் கிலென் லூசியல் ஹெஃப்னர் ஆகியோருக்கு இரு மகன்களில் மூத்தவராகப் பிறந்தார். அவர்கள் இருவரும் ஆசிரியர்கள். ஹெஃப்னர் அமெரிக்க இராணுவ தினசரியில் 1944 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

அவர் பின்னர் 1949 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்ப்பெயினிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் படைப்பாக்க எழுத்து மற்றும்  கலை ஆகிய இரு பாடங்களுடன்  இளங்கலைப் பட்டத்தை இரண்டரை வருடங்களில் பெற்றார்.

பட்டம் பெற்றப் பின்னர், இளங்கலைப் பட்டத்திற்கு பிந்தைய பருவக்கல்வியில் சமூகவியல், மகளிர்  மற்றும் பாலின ஆய்வுகள் ஆகியவற்றை நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

பின்னர் எஸ்கொயரியில் பிரதி எழுத்தராக பணியாற்றி வந்த அவர் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 டாலர்  சம்பள உயர்வு மறுக்கப்பட்டதால் வெளியேறினார். 1953 ஆம் ஆண்டில், அவரது இருக்கை சாமான்களை 600 டாலருக்கு  விற்றார்.  அதோடு முதலீட்டாளர்களிடமிருந்து  8000 டாலரை திரட்டி அதன் மூலம் ப்ளேபாய் இதழைத் தொடங்கினார். அதன் பிறகு அவரது வாழ்க்கை உயர உயர பறந்தது என்றே சொல்ல வேண்டும். ஏராளமான பெண்களுடன் தொடர்பு, செக்ஸ் என் அவரது வாழ்க்கை மிக ஜாலியாக இருந்தது.

ஒரு சமயத்தில் ஏழு பெண்களுடன் கூட காதல் செய்தார். அவர்களில்  பிரபல நடிகைகளான பிராண்டே ரோடெரிக், இஸபெல்லா செண்ட்.ஜேம்ஸ், டினா மேரி ஜோர்டன், ஹோலி மாடிசன், பிரிகெட் மார்கர்த் மற்றும் கேந்திரா வில்கின்சன் ஆகியோர் அடங்குவர்.

சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள்.  ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது.

வயாகரா மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.

ஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்