samantha : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்... நடிகை சமந்தாவுக்கு என்ன ஆச்சு?- மேனேஜர் விளக்கம்

Ganesh A   | Asianet News
Published : Dec 13, 2021, 07:25 PM IST
samantha : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்... நடிகை சமந்தாவுக்கு என்ன ஆச்சு?- மேனேஜர் விளக்கம்

சுருக்கம்

நடிகை சமந்தா (samantha) தெலங்கானாவின் காச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா (pushpa) படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு முடித்து கடப்பாவிலிருந்து ஐதராபாத் திரும்பிய நடிகை சமந்தாவுக்கு (samantha) உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் தெலங்கானாவின் காச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “சமந்தா ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். நேற்று அவருக்கு லேசாக இருமல் இருந்தது. அதனால் தான், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டார். எந்தவித வதந்திகளை நம்ப வேண்டாம்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!
என் திருமணக் கனவு அதுதான்: காதலர் சாந்தனுவுடன் வாழ்வு குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!