அண்ணனுடன் ஹிட் பாடல்களை கொடுத்த பிரபல இசையமைப்பாளர், தம்பியுடன் இணைகிறார்...யார் தெரியுமா?

First Published Jan 26, 2018, 8:22 PM IST
Highlights
harries jayaraj join karthick movie


கார்த்தியுடன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் வினய், பாவனா நடித்த ஜெயம் கொண்டான் படத்தினை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரஜத். தற்போது இவர் கார்த்தியை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுவே ரஜத்திற்கு முதல் படமாகும். 

மீண்டும் கார்த்தி ரகுல்பிரீத் சிங்

"தீரன் அதிகாரம் ஒன்று" படத்தில் நடித்த கார்த்தி ரகுல் பிரீத் சிங் ஜோடி பெரிதாக பேசப்பட்டது. காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவர்கள் என்று காத்திருந்தனர். முத்தாய்ப்பாக இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 


ஹாரிஸ் ஜெயராஜ்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சிறப்பு செய்தியாக இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்தி கூட்டணி இணைகிறது. இதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



அப்போ அண்ணன், இப்போ தம்பி

ஹாரிஸ் ஜெயராஜ், சூர்யாவுடன் இணைந்து காக்க காக்க, கஜினி, அயன் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்த படங்களுக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.அண்ணனுடன் இணைந்து வெற்றி கொடுத்த ஹாரிஸ், தற்போது தம்பி காரத்தியுடன் கூட்டணி வைத்துள்ளார்.இந்த கூட்டணி ஹிட் பாடல்களை தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் "கடைக்குட்டி சிங்கம்"என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரியா பவானிஷங்கர்,  வனமகன் புகழ் சாயிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விவசாயியாக நடிக்கிறார் கார்த்தி. இந்த படம் முடிவடைந்த பின், ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.

click me!