கொஞ்சம் ஓவராகவே ஒர்க் அவுட்டான அபர்ணதி - ஜி.வி.பிரகாஷ் ரொமான்ஸ்... லாக்டவுனிலும் செம்ம ரெஸ்பான்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 20, 2020, 06:57 PM ISTUpdated : Jun 20, 2020, 06:58 PM IST
கொஞ்சம் ஓவராகவே ஒர்க் அவுட்டான அபர்ணதி - ஜி.வி.பிரகாஷ் ரொமான்ஸ்... லாக்டவுனிலும் செம்ம ரெஸ்பான்ஸ்...!

சுருக்கம்

கடந்த 15ம் தேதி இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “காத்தோடு காத்தானேன்” பாடல் வெளியிடப்பட்டது. தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் செவி வழியே நுழைந்து மனதையும் மயக்குவதாக ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

தமிழில், தொடர்ந்து தரமான கதைகளை கொண்ட படங்களை இயக்கி, வெற்றி இயக்குநர் என்பதை தாண்டி, எதார்த்தமான இயக்குனர் என ரசிகர்களால் பார்க்கப்படுபவர் இயக்குநர் 'வசந்த பாலன்' . இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. ஏற்கனவே இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த வசந்தபாலன் இந்த முறை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார். 

 

இதையும் படிங்க: 3வது திருமணத்திற்கு ஜூன் 27-யை தேர்ந்தெடுத்தது ஏன்?... லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா....!

2006ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய “வெயில்” படம் மூலம் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மீண்டும் 14 வருடங்கள் கழித்து வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இணைந்துள்ளார். கடந்த ஒருவருடமாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த திரைப்படம் ஊரடங்கிற்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தில், நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான “எங்கள் வீடு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில், ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்து, அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்த, தஞ்சாவூர் பொண்ணு அபர்ணதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். 

கடந்த 15ம் தேதி இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “காத்தோடு காத்தானேன்” பாடல் வெளியிடப்பட்டது. தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் செவி வழியே நுழைந்து மனதையும் மயக்குவதாக ரசிகர்கள் பாராட்டி வந்தனர். அந்த வீடியோவில் அபர்ணதி, ஜி.வி.பிரகாஷ் நெருக்கமாக இருப்பது போன்ற ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

 

இதையும் படிங்க: “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

இந்த படத்தில் அபர்ணதி லிப்-லாக் காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மனதை மயங்கும் இசை, அழகான வரிகள், காதலர்களின் கொஞ்சல் என சகலத்துடன் வெளியான அந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை அந்த பாடலை யூ-டியூப்பில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளதால் படக்குழுவினர் செம்ம குஷியில் உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!