
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகத்தில் வெற்றி கண்ட ஜிவி பிரகாஷ் குமாருக்கு, நடிக்கும் வாய்ப்புகள் வாண்டடாக அமைந்தது. வந்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன் படுத்திகொண்டு ஜி.வி.பிரகாஷ் நடிகராகவும் வெற்றி கண்டார். அதே நேரத்தில், இசையமைப்பாளராகவும், தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 19ஆம் தேதி ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தவுடன் கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பலர் ஜி.வி.பிரகாஷின் மகள் பெயர் என்ன என்பதை தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைப்பக்கத்தில் ஜிவி பிரகாஷின் குழந்தை பெயர் அன்வி கூறியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் குட்டி தேவதை அன்வியை பார்க்க நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்றும் அந்த குழந்தைக்கு எங்களுடைய டன் கணக்கான அன்பை பகிர்ந்து கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கணேஷ் வெங்கட்ராமனின் இந்த பதிவிலிருந்து ஜிவி பிரகாஷின் குழந்தையின் பெயர் அன்வி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.