
தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவருடைய அம்மா, ஏ.ஆர்.ரெஹானா ஆகிய இருவருக்கும் சர்வதேச 'எக்ஸ்னோரா' அமைப்பு உயரிய பதவிகள் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்க்கு பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ், நடிப்பு, இசையமைப்பு என்பதையும் தாண்டி சமீப காலமாக பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். அதே போல், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர் என பன்முகத்தோடு விளங்கும் இவருடைய அம்மா... ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானாவும் சுற்று சூழல் சம்மந்தமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக, கடந்த 30 வருடமாக சுற்று சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும், சர்வதேச அமைப்பான 'எக்ஸ்னோரா' ஏ.ஆர்.ரெஹானாவை இந்த அமைப்பின் தலைவராகவும், ஜி.வி.பிரகாஷை, பசுமை தூதராகவும் நியமித்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் நாளை நடைபெற உள்ள, 'ட்ரீ சேலஞ்' என்ற பெயரில் நடைபெற உள்ள மரம் நடும் விழாவில் 'எக்ஸ்னோரா' அமைப்பின் தலைவராக இருக்கும் ரெஹானா மற்றும் பசுமை தூதரான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.