
முன்னணி நட்சத்திரங்களின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘கூர்கா’ படத்தின் ட்ரெயிலர் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்க் கடந்து சாதனை படைத்துள்ளது.
ரஜினி,விஜய்,அஜித் படங்கள் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடியனாகக் கலக்கி வரும் யோகிபாபு தற்போது ஹீரோ அவதாரம் எடுத்தும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ‘கூர்கா’ வெளிவரவிருக்கிறது.
நேற்று வெளியான அப்பட ட்ரெயிலரில் சுவாமி நித்யானந்தா தொடங்கி ,மெர்சல் படத்தின் தளபதி விஜய், செல்ஃபி எடுக்கும் போது சிவகுமார் தட்டி விடுவது ஆகியவற்றை வரிசைகட்டி கலாய்க்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சக்திமான் தொடரையும் கலாய்க்கும் வகையிலும், இந்த டீசர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘டார்லிங்’, ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ மற்றும் ’100’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி படம் கூர்கா. இப்படத்தில், முன்னணி ரோலில் யோகி பாபு நடித்துள்ளார். இவருடன் இணைந்து மயில்சாமி, மனோபாலா, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சார்லி, எலிசா எர்ஹட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இந்த டீஸரை ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.