இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞன் கிரிஷ் கர்னாட் காலமானார்...

By Muthurama LingamFirst Published Jun 10, 2019, 10:26 AM IST
Highlights

ஞானபீட விருது, பத்மஸ்ரீ. பத்ம பூஷன் விருதுகளை வென்ற ஜனங்களின் கலைஞன் பிரபல நடிகர், எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியருமான  கிரிஷ் கர்னாட் இன்று  திங்கட்கிழமை பெங்களூரில் காலமானார். அவர் 81 வயது. இவர் தமிழில் ‘ரட்சகன்,காதலன், செல்லமே, ஹேராம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

1938 ஆம் ஆண்டு மே 19 அன்று மகாராஷ்டிராவில் பிறந்தார். 1958 ல் கர்நாடகா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பதற்கான ஒரு கூட்டுப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1963 ல் எம்.ஜி. பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டில்,  தத்துவம், அரசியல், மற்றும் பொருளாதாரமும் பயின்றவரான கிரிஷ் கர்னாட் 1954 ல் எழுதிய ‘துக்ளக் நாடகத்திற்காக இந்திய அளவில் புகழ் பெற்றார்.

யூ.ஆர் அனந்த மூர்த்தி எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு தயாரான கன்னடப்படமான ‘சமஸ்காரா’வில் 1970ல்  அறிமுகமான கிரிஷ்கர்னாட் இந்தியாவின் அத்தனை மொழிப்படங்களிலும் மிக முக்கியமான பாத்திரங்களில் நடித்து தன்னிகரற்ற நடிகராக விளங்கினார். சினிமா நடிப்பை விட சமூக சீர்த்திருத்த நாடகங்கள், மற்ரும் பயிலரங்குகளில் தனது இறுதிக்காலம் வரை செலவழித்து வந்த கர்னாட்டின் பெயர் கவுரி லங்கேஷ் கொலைகாரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி சரஸ்வதி,  மகன் ரகு கர்னத், ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் மற்றும் மகள் ராதா  கென்யாவில் உள்ள ஒரு டாக்டராக இருக்கிறார்.

click me!