5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தலைவர்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

By manimegalai aFirst Published Jun 9, 2019, 7:04 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, தலைவரின் ரசிகர்களை குஷியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, தலைவரின் ரசிகர்களை குஷியாகியுள்ளது.

ரஜினிகாந்த் ஒரு நடிகராக பலராலும் அறியப்பட்டாலும், அவரை உயிராக, உலகமாக, பார்க்கும் பல ரசிகர்கள் கோலிவுட் திரையுலகத்தில் உள்ளனர். பல ஆட்டோக்காரர்களுக்கும் இன்று அவர் ஒரு தோழனாகவும் , வழக்கட்டியாகவும் உள்ளார். 

அவரின் திரைப்படம் வரும் போதும், அதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவர்கள் வீட்டு விசேஷம் போல் கொண்டாடி மகிழ்வார்கள். அன்றைய தினம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

ஒரு கார்பென்டராக,  தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து பின் பஸ் கண்டக்டர்,  வில்லன் நடிகர், என பல்வேறு சவால்களை கடந்து இன்று  சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.  இதற்கு முக்கிய காரணம் அவரின் கடின உழைப்பு. இதனால் இன்று இவருடைய புகழை நாடு கடந்தும் பலர் பேசுகிறார்கள்.

இந்நிலையில் இவரின் கடின உழைப்பையும், வெற்றியையும்,  குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில்,  5 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் 'Rags To Riches Story ' என்கிற பாகத்தில் இவரைப்பற்றிய தகவல்களை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண மனிதராக வறுமையில் பிறந்து, பின்  உலகம் வியர்ந்து பார்க்கக்கூடிய உச்சகட்ட பிரபலங்களாக மாறியவர்கள் பற்றிய தொகுப்பு பாடமாக இடம் பெற்றுள்ளது.  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தவிர சார்லின் சாப்ளின்,  ஸ்டீவ் ஜாப், மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். 

at 5th Standard text book.
"Rags To Riches Story "
Inspiration to many 🤘 pic.twitter.com/7akLncqSfk

— Rajinifans.com (@rajinifans)

click me!