
'பப்பி' புகழ் வருண் ஹீரோவாடி நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராஹேய் நடிக்கிறார். கவுதம் மேனனின் ஃபேவரைட் ரொமாண்டிக்குடன் ஆக்ஷன், திரில்லர் ஜானரில் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் சத்தமே இல்லாமல் வேகமாக உருவாகிவருகிறது.
2020 ஃபிப்ரவரி மாதம் காதலர் தின கொண்டாட்டமாக திரைக்குவரவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று விஷுவல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சொன்னபடியே, 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தின் விஷுவல் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு சமூக வலைதளத்தையே அதிரவைத்துள்ளது.
ஹாலிவுட் ஸ்டைலில் அசரடிக்கும் இந்த வீடியோவை, 'ராக் ஸ்டார்' அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஷுவல் ஃபர்ஸ்ட் லுக் என்றால் சிறு விநாடிகள் கொண்ட வீடியோவைதான் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், யாரும் எதிபார்க்காத வகையில், காண்போர் மெய்சிலிர்க்கும் அளவுக்கு டிரைலரைப் போன்று எக்கச்சக்க சர்ப்ரைஸ்களுடன் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார் கவுதம் மேனன். 90 நிமிடம் ஓடும் இந்த விஷுவல் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் மொத்த கதையையும் தெரியப்படுத்தியதுடன், தன்னுடைய ஸ்டைலிஷ் மேக்கிங்கால் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் யார் என்பதும் இதுவரை தெரியாமல் இருந்தது. அந்த சஸ்பென்சையும் இந்த விஷுவல் ஃபர்ஸ்ட் லுக் மூலம் உடைத்துள்ளார் கவுதம் மேனன். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்திற்கு, எதிர்பார்த்த மாதிரியே தர்புகா சிவா இசையமைக்கிறார்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் - தர்புகா சிவா இணைந்துள்ள 2-வது படம் இது. "எவன் வந்தாலும் சரி.. இமை போல் காக்க நான் இருப்பேன்" என வருண் மிரட்டியிருக்கும் 'ஜோஷ்வா இமை போல் காக்க' விஷுவல் ஃபர்ஸ்ட் லுக், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.