வடை போச்சே.... சோகத்தில் மூழ்கிய கௌதமி...!!!

Asianet News Tamil  
Published : Feb 16, 2017, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
வடை போச்சே.... சோகத்தில் மூழ்கிய கௌதமி...!!!

சுருக்கம்

நடிகை கௌதமி கேன்சர் நோயில் இருந்து மீண்ட பிறகு, புற்று நோய் நோயாளிகளுக்காக தன்னார்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

கமலின் லிவிங் டூ கெதர் பிடியில் இருந்து விலகி வெளியே வந்ததும், ஒரு பக்கம் தொண்டு நிறுவனத்தில் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு புறம் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் .

தீடீர் என மோடியை சந்தித்து அனைவரையும் ஆச்சார்யா படுத்தினார், அதே போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் உள்ளது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த பிரபலமும் இவர் தான் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த கௌதமி , அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசியல் சம்பந்தமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது கௌதமி அரசியலுக்கு வருவதை உறுதி படுத்துவதாக கூறப்பட்டது. மீண்டும் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவி  ஏற்றிருந்தால் அவரது தலைமையில் அரசியல் பணியில் ஈடுபடுவது போல் எண்ணம் கொண்டிருந்த கௌதமி... தற்போது வடை போச்சே.... என்பது போல் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Awards: மம்முட்டியை உச்சி முகர்ந்த கமல்! 40 ஆண்டுகால 'சைலண்ட்' நட்பின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!
Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!