
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விவேக் உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலகினர் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நடிகைகள் ஆர்த்தி, இந்துஜா, ஜோதிகா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ் காமெடி நடிகர்களில் முன்னணி நடிகரான கவுண்டமணி சக காமெடி நடிகரான விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த கவுண்டமணி விவேக் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தள்ளாடிய படி நடந்து வரும் உருக்கமான வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.