கேபிள் டிவி யில் புது படமா...? அப்போ இந்தாங்க பரிசு... ஞானவேல் ராஜா அறிவிப்பு...

 
Published : Jun 04, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
கேபிள் டிவி யில் புது படமா...? அப்போ இந்தாங்க பரிசு... ஞானவேல் ராஜா அறிவிப்பு...

சுருக்கம்

gnanavel raja announced gift

இயக்குனர் பாரதி ராஜா நடித்து இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்  இயக்கியுள்ள திரைப்படம் "குரங்கு பொம்மை".

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரையுலகை சேர்த்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரைத்துறையை சேர்த்த சிலரே, பலரை திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க விடாமல் தடை செய்கின்றனர் என்று குற்றம் சாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர் புதிய திரைப்படங்கள் திருட்டு விசிடிகள் மூலம் வெளிவராமல் இருக்க தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும். அதே போல கேபிள் டிவிக்களில் புதுப்படம் ஒளிபரப்பபடுவது பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!