
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் 3D டீசருக்கான இலவச டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, தற்போது கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை நவம்பர் 29ம் தேடி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே, இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ம் நாளை வெளியாகிறது. 2.0 டீசரை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3டியில் வெளியாகும் அதே நேரத்தில் யூடியூப் மற்றும் 2டியிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சத்யம் மற்றும் பிவிஆர் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘2.0’ படத்தின் 3D டீசரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இலவச டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.
மேலும் +91 9099949466 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவச டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பட வெளியீட்டின்போது இந்த திரையரங்குகளில் ‘2.0’ படத்தின் பிரீமியர் ஷோவும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.