
ஜூலி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிக் பாஸ் குடும்பத்தின் தலைவி , கயாத்திரியிடம், 'நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன...?', நான் சம்பாதிக்க தான் இங்கு வந்துருக்கேன் என கூறி செம சண்டை போட்டார்.
இதனால் காயத்திரி முழுமையாக ஜூலியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதை தொடர்ந்து ஜூலி தானாக காயத்திரியிடம் சென்று அக்கா நீங்க ஏன் என்னிடம் பேச மாட்டேங்குறீங்க என கேட்க அதற்கு காயத்திரி நான் ஏன் உன்கிட்ட பேசணும்..? உன்னை நான் என் சொந்த தங்கையாக நினைத்து தான் உன்னை கிண்டல் கேலி செய்தேன்.
நான் செய்தது பிடிக்கவில்லை என்றால், என்னிடம் வந்து நீ சொல்லி இருக்கணும், இல்லை ஆர்த்தி சொல்லுவது பிடிக்கவில்லை என்றால் அதை தன்னிடம் கூறினால் நான் ஆர்த்தியிடம் சொல்லி இருப்பேன். ஆனால் நீ அப்படி நடந்து கொள்ள வில்லை அது தனக்கு பிடிக்க வில்லை என கூறினார்.
அதற்கு ஜூலி கண்ணில் கண்ணீரோடு, மீண்டும் பழைய கதையை சொல்ல, அதற்கு காயத்திரி நீ என்று நடிக்கமல் , உண்மையா பழகுகிறாய் என தனக்கு தோன்றுகிறதோ அன்று நான் உன்னுடன் பேசுகிறேன் என கூறி வழிய போய் பேசிய ஜூலியை அசிங்க படுத்தி அனுப்பிவிட்டார் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.