ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' !

By manimegalai a  |  First Published Dec 28, 2022, 11:13 PM IST

விஷ்ணு விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கட்டா குஸ்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 


டிசம்பர் 2 தேதி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'DSP' படத்திற்கு போட்டியாக, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'.  இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, 'பொன்னியின் செல்வன்' பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

'குஸ்தி' விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களுடன் ரசிகர்கள் மனதை கவரும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில்  ஜஸ்டின் பிரபாகர் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

Tap to resize

Latest Videos

அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் மகள் ஆரின்! மளமளவென வளர்ந்துட்டாங்களே ? கிருஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸ்!

விஜய் சேதுபதியின் டி எஸ் பி, திரைப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்ற  போதிலும், விஷ்ணு விஷாலுக்கு இது வெற்றிப்படமாக அமைந்தது. இதற்க்கு முக்கிய காரணம், விஷ்ணு விஷாலின் வித்தியாசமான கதை தேர்வு எனலாம். அதே போல், ஆஷன் காட்சியில் பின்னி பெடல் எடுத்த ஐஸ்வர்யா லட்சுமி தன்னால், இப்படி பட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார். 

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படம்  ஜனவரி 1 ஆம் தேதி, நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில், வெளியாக உள்ளதாக தற்போது நெட்பிளிக்ஸ், சமூக வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தனுஷை விவாகரத்து செய்த பின்... ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Kalyanam aiyuta appo ippo kusthi pottu thaan aaganum🤼 Gatta Kusthi, streaming on Netflix from 1st January. pic.twitter.com/8QSbf6bOnK

— Netflix India South (@Netflix_INSouth)

click me!