
நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சொச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.
நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும், புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது , “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் , உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ ஹார்பிக் “ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.
தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளத்தில் “ மை ஸ்டோரி “ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ் , பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக கணேஷ் வெங்கடராம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.