நேற்று ‘காதலிக்க யாருமில்லை’ இன்று ‘சிவப்பு மஞ்சள் பச்சை’...இனிமேல் படங்களுக்கு இசையமைப்பாரா ஜீ.வி.பிரகாஷ்?...

Published : Mar 08, 2019, 09:41 AM IST
நேற்று ‘காதலிக்க யாருமில்லை’ இன்று ‘சிவப்பு மஞ்சள் பச்சை’...இனிமேல் படங்களுக்கு இசையமைப்பாரா ஜீ.வி.பிரகாஷ்?...

சுருக்கம்

விட்டால் வாரத்துக்கு ஒரு படம் அறிவிப்பாரோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு ‘காதலிக்க யாருமில்லை’ படத்தை அறிவித்த அடுத்த நாளே, தான் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார். 

விட்டால் வாரத்துக்கு ஒரு படம் அறிவிப்பாரோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு ‘காதலிக்க யாருமில்லை’ படத்தை அறிவித்த அடுத்த நாளே, தான் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார். இதனால் இனிமேல் அவர் படங்களுக்கு இசையமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ படம் வரை உணர்வுகளை மையப்படுத்தி, ஜனரஞ்சகமாக முறையில் தனது கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் சசி. இவர் அடுத்ததாக சித்தார்த் - ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். முதலில் `ரெட்ட கொம்பு' என பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் தலைப்பை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று மாற்றியுள்ளனர்.

அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் இந்த படம் பற்றி இயக்குநர் சசி பேசும் போது,

‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோல் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

முதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’ என்றார். 

நடிகை லிஜோமோல் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் அறிமுகமானவர். அடுத்து நடித்த ‘கட்டப்பனையிலே ரிதிக் ரோஷன்’ படத்தின் மூலம் மலையாளத்திரையுலகின் முன்னணி நடிகையானார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?