திரைப்பட தயாரிப்பாளர்ளை மிரட்டும் ஃபெஃப்சி….ஒப்பந்தப்படி ஊதியம் தராவிட்டால் நாளை முதல் வேலை நிறுத்தம்…

First Published Jul 31, 2017, 9:06 AM IST
Highlights
from tommorrow fepsi strike


ஒப்புக்கொண்டபடி ஊதியம் தராவிட்டால்  நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனமான  ஃபெஃப்சி யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

ஃபெஃப்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால் திரைப்பட தயாரிப்பு பணிகளை ஃபெஃப்சி சங்கத்துடன் இணைந்து செய்ய வேண்டிய தேவையில்லை என திரைப்பட தயாரிப்பாளர்  சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி,  இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்சி  சார்பில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறினார்.

இதனிடையே, ஃபெஃப்சி யுடன் இணைந்து பணியாற்றுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃபெஃப்சி யின் அங்கமான டெக்னிஷியன்கள் சங்கத்துடன் முழுவதுமாக இணைந்து பணியாற்ற இயலாத சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி ஊதியம் தராவிட்டால்  நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக  ஆர்.கே.செல்வமணி எச்சரித்துள்ளார்.

 

 

tags
click me!