
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும், போன் மூலம் ரசிகர்கள் உள்ளே உள்ள ஹவுஸ் மேட்ஸ்சுடன் பேசி வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.
அதே போல் இந்த வாரம், சாண்டியிடம் ஒரு போன் காலர் பேசுவது, தற்போது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
"எல்லாரையும் சிரிக்க வைக்குற சாண்டி, சண்டைனு வந்துட்டா ஏன் நியாயத்துக்கு குரல் கொடுக்காம விலகியே இருக்கீங்க என கேட்கிறார். இதற்கு சிரித்தவாரே சாண்டி, இனிமேல் கண்டிப்பாக குரல் கொடுக்கிறேன் என கூறுகிறார். இவர் சொன்ன பதிலை மடக்கி, இனிமேல் கேட்க வில்லை, இதற்கு முன் ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி கேட்டு சாண்டியை சிக்க வைக்கிறார் கமல்.
இதற்கு சாண்டி, எப்படி உள்ளே நுழைவது என்றே தெரியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது என கூறுகிறார். இவரின் இந்த பதிலை கேட்டு அரங்கமே கைதட்டுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.