நாளை மாவீரர் தினத்தை ஒட்டி வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தின் முதல் பார்வை... சென்ஸார்ல விடுவாங்களா?

By vinoth kumar  |  First Published Nov 25, 2018, 2:11 PM IST

ஈழத் தமிழர்களுக்கு ஆதர்வாக இதுவரை எடுக்கப்பட்ட படங்கள் எதுவுமே திரைக்கு வந்ததில்லை அல்லது பலத்த சேதாரத்தோடு மட்டுமே வந்து சேர்ந்திருக்கின்றன எனும் நிலையில் மாவீரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்ட ’சீறும் புலி’ என்னும் படத்தின் முதல் பார்வை நாளை வெளியாக உள்ளது.

ஸ்டுடியோ 18’ என்னும் நிறுவனம் தயாரிக்க, ஜி.வெங்கடேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாகரன் வேடத்தில் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருடன் நடித்த மற்ற நடிகர்களின் பட்டியல், இதர டெக்னீஷியன்கள் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பிரபாகரனின் வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்திருப்பதாகச் சொல்லப்படும் இப்படத்தை சென்ஸார் அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்னும் நிலையில் நாளை பிரபாகரனின் பிறந்த நாளான மாவீரர் தினத்தன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிடுகிறார்கள் என்னும் செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பாகி வருகிறது.
 
click me!