நான் வளர்த்துவிட்ட பையன் பாக்கியராஜ்...!! பாக்கியராஜை எதிரில் வைத்துக்கொண்டே விமர்சித்த பாரதிராஜா...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2019, 12:55 PM IST
Highlights

அவனை ஹீரோவாக்கிய போது சிலர் என்னை பைத்தியம் பிடித்துவிட்டதா உங்களுக்கு  என கேட்டார்கள் ஆனால் என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன்,

பாக்கியராஜை ஹீரோவாக நடிக்கவைத்த போது உங்களுக்கு என்ன பைத்தியமா என பலர் என்னிடம்  கேட்டனர் ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை  என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .  மேடையில் பாக்கியராஜை எதிரில் வைத்துக்கொண்டே  அவர் இப்படி  கூறியது மேடையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.   டிஜிட்டல் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் என்பவர் இயக்கி நடிக்கும் படம் பச்சை விளக்கு , இப்படத்தில்  புதுமுக நாயகி தீஷா தாரா ,  ஸ்ரீ மகேஷ் , இமான் அண்ணாச்சி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர் . 

இப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை திரைப்படக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது .  இதில் இயக்குனர் பாரதிராஜா ,  இயக்குனர் பாக்யராஜ் ,  மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .  அதில் பேசிய இயக்குனர் பாரதிராஜா இந்தப்படம் பொதுநலன் கருத்துள்ள படம் ,  அதேநேரத்தில் படத்தில் கமர்சியலும்  இருக்கிறது .  இந்தப்படம் அரசாங்கம் எடுத்திருக்க வேண்டிய படம் .  இன்று நிறைய பேர் சாலை பயணத்தில் பச்சைவிளக்கை  மதிப்பதில்லை பச்சை விளக்கு போடும் முன்னை சென்றால்  போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை .  நிதானம் மிக முக்கியம் நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும் நிதானமாகச் சென்றால்  நீண்ட நாள் வாழலாம் அப்படிப்பட்ட படம்தான் பச்சைவிளக்கு என்றார் .

அப்போது  பாக்யராஜ் குறித்து பேசிய அவர் ,  பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்த போது வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன்,  வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான் ,  அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது அப்போது கண்ணாடியை மாட்டி அவனை ஹிரோவாக்கினேன் .  அவனை ஹீரோவாக்கிய போது சிலர் என்னை பைத்தியம் பிடித்துவிட்டதா உங்களுக்கு  என கேட்டார்கள் ஆனால் என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன்,  பிறகு வளர்ந்தது வேறு கதை, ஆனால்  நான் விதை போட்டேன் அவ்வளவு தான் ,  ஆனால் விதை போடுவதற்கும்  ஒரு துணிச்சல் வேண்டும் என்றார் .

click me!