
தமிழ் சினிமாவில், மிகவும் போராடி முன்னணி இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர், விக்ரம். இவருடைய மகனே கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டாலும் தற்போது வரை, வித்தியாசமான ஹீரோ கான்செப்ட் படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.
சேது, பிதாமகன், ஐ, போன்ற படங்களுக்காக இவர் எடுத்த ரிஸ்க் கொஞ்சம் நஞ்சம் இல்லை. திடீர் என உடலை ஏற்றி, இறக்கி உயிருக்கே ஆபத்து என தெரிந்தும் பல ரிஸ்குகளை, அசால்டாக எடுத்து திரைத்துறையில் தனக்குள்ள ஈடுபாட்டை காட்டினார்.
கடந்த வருடம் இவருடைய மகன், துரு அறிமுகமான 'ஆத்ய வர்மா' படத்தில் ஒருவேளை மகன் நடிக்கவில்லை என்றால் நானே ரொமான்டிக் ஹீரோவாக நடித்து கலக்கி இருப்பேன் என ஓப்பனாகவே கூறியவர்.
இந்த நிலையில் இவரை பற்றி ஒரு வதந்தி வேகமாக பரவியது. அதாவது கடைசியாக இவர் நடித்து வரும் படங்களை நடித்து முடித்த பிறகு, பின் எந்த படத்திலும் அவர் நடிக்க போவதாக இல்லை என்றும், அவருடைய மகன் துருவ் நாயகனாக நடிக்கும் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளத்தை சுற்றி வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் விக்ரமின் தரப்பை சேர்ந்தவர்கள், இந்த செய்தி முற்றிலும் வதந்தி... என கூறி இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர்.
இப்படியெல்லாம் புதுசு புதுசா யாரு தான் கிளப்பி விடுறாங்களா... அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.