
அத்துடன், அவரே ஒளிப்பதிவு செய்து படத்தையும் தயாரித்துள்ளார். அவருடன் விஜய்சேதுபதி, சமீர் பரத்ராம் ஆகியோரும் இணைந்து 'கடைசி விவசாயி' படத்தை தயாரித்துள்ளனர்.
அழிந்து வரும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய பிரச்னைகளையும், அவர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'ஆண்டவன் கட்டளை' படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, 'கடைசி விவசாயி' படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார்.
யானை பாகனாக காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். 'ஆண்டவன் கட்டளை' படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி - யோகிபாபு மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்றாலும், கதையின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது கடைசி விவசாயி படத்தின் டிரைலரை வெளியிட்டு அசரடித்துள்ளது படக்குழு.
இளைஞராஜாவின் கிராமிய பின்னணி இசையுடன் தொடங்கும் டிரைலரில், "பில்கேட்ஸ்கிட்ட பேசுனியாப்பா?" என ஒருவர் கேட்க "நான் பேசிட்டேன் அவர்தான் என்கிட்ட பேசல" என சரவெடி கவுண்டர்களால் விஜய்சேதுபதி அசரடிக்க, மரபுமாற்று விதை தொடர்பாக பெரியவர் நல்லாண்டி பேசியுள்ள வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மொத்தத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை சொல்லவருகிறான் 'கடைசி விவசாயி' என்பதை உறுதிப்பட அசத்தலாக சொல்லியிருக்கும் இந்த டிரைலர், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.